வகுப்பறையில் விஷம் குடித்து கல்லூரி மாணவி உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

மதியம் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் அமர்ந்திருந்தனர்.;

Update:2025-04-14 18:26 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பரதரி பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஸ்வீட்டி (வயது 20) என்ற மாணவி பிஎஸ்சி பயோடெக் கல்வி பயின்று வந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் அமர்ந்திருந்தனர். அப்போது, மாணவி ஸ்வீட்டி தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் உடனடியாக மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்வீட்டி இன்று உயிரிழந்தார். இதையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேவேளை, மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்