டெல்லி தேர்தல்: காங்கிரசின் பரிதாப நிலை: ஒரு தொகுதியில் கூட முன்னிலை இல்லை

டெல்லியில் கடந்த இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை;

Update:2025-02-08 10:06 IST

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியபடியே பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலையை நோக்கி செல்கிறது.

ஆம் ஆத்மி கடும் பின்னடவை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. டெல்லியில் 2013 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முறை வென்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அதன் பிறகு 2015 மற்றும் 2020 தேர்தல்களில் ஒரு சீட் கூட வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், 2025 சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.  காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர்  தீவிர பிரசாரம் செய்ததால் இந்த முறை கணிசமான இடங்களில் அக்கட்சி வெற்றி பெறும் என்று அக்கட்சியினர் நம்பினர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலை இந்த முறையும் நீடிக்கும் என்றே தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்