மணிப்பூரில் ரூ. 55 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2025-06-10 10:45 IST

இம்பால்,

மியான்மர் எல்லை வழியாக மணிப்பூருக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள், எல்லைப்பாதுகாப்புப்படையினர், போலீசாருடன் இணைந்து அதிகாரிகள் கடந்த 5ம் தேதி முதல் 3 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

மணிப்பூரின் எல்லையோர மாவட்டமான சுராசந்த்பூர் மாவட்டத்தில் நடந்த சோதனையில் மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட 55 கோடி ரூபாய் மதிப்புள்ள 7.75 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ. 35 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்