மதுபோதையில் சொகுசு காரை ஓட்டிய நபர்; ஸ்கூட்டர் மீது மோதியதில் ஒருவர் பலி

சிகிச்சைக்குப்பின் கார் டிரைவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.;

Update:2025-07-18 21:51 IST

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் சர்கசன் பகுதியில் உள்ள சாலையில் நேற்று காலை நபர் தனது ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் கண் இமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரும் அருகில் உள்ள சுவரில் மோதியுள்ளது. இதில், சொகுசு கார் டிரைவரும் காயமடைந்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த கார் டிரைவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர்.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் சொகுசு கார் டிரைவர் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனை சிகிச்சைக்குப்பின் கார் டிரைவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது 



Tags:    

மேலும் செய்திகள்