ஒரே நாளில் இந்தியாவில் 3 இடங்களில் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேகாலயாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2025-05-04 18:10 IST

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 22.07 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.42 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

முன்னர் ராஜஸ்தானில் இன்று காலை 9.30 மணியளவில் ரிகடர் 3.1 அளவிலும், மேகாலயாவில் இன்று காலை 7.56 மணியளவில் ரிக்டர் 2.6 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று ஒரே நாளில் இந்தியாவில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்