பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.;

Update:2025-10-28 16:49 IST

பாட்னா,

இந்திய அரசியலின் மிகவும் பிரபலமான வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். 1977-ம் ஆண்டில் பீகாரில் பிறந்தவர். பொது சுகாதார துறையில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பணியாற்றிய பிறகு, 2011-ல் அரசியலுக்கு வந்தார். 2014-ல் மோடியின் பிரதமர் பிரசாரத்துக்கான தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்ததன் மூலம் நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றார்.

2022-ம் ஆண்டு ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி, பீகாரில் மக்கள் நேரடி பங்கேற்பு அடிப்படையிலான மாற்று அரசியல் உருவாக்க முயற்சி செய்கிறார். ஊழல் ஒழிப்பு, கல்வி சீர்திருத்தம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்.

தற்போது அவர் பீகார் அரசியலில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்து, பாரம்பரிய சாதி அரசியலைவிட “வளர்ச்சி அரசியல்” என்ற புதிய முகத்தை உருவாக்கி வருகிறார். 240 தொகுதிகளில் அவரது கட்சி வேட்பாளர்கள் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் களம் காண்கின்றனர்.

இந்த நிலையில், பீகார், மேற்குவங்காள்ம் ஆகிய இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து அடுத்த 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்