கேரளா: நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழப்பு

யானையின் இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;

Update:2025-02-21 16:27 IST

கொச்சி,

கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் நெற்றியில் பலத்த காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானையை இரண்டு நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் சிகிச்சைக்காக கோடநாடு யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வந்தனர்.

மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்த காட்டு யானை இன்று மதியம் இறந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் யானையின் இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை என்றும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அது தீர்மானிக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, வனவிலங்கு அதிகாரிகள் பல நாட்களாக காயமடைந்த யானையை கண்காணித்து அதற்கு சிகிச்சையும் அளித்து வந்துள்ளனர். ஆனால் காயம் குணமடையாததால் அதை மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்