அரசுப்பள்ளியில் ஏற்றப்பட்ட பாலஸ்தீன கொடி; அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூர் கேரி மாவட்டம் லஹாகா அலிகஞ் கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற கொடிக்கம்பம் உள்ளது.
இந்நிலையில், பள்ளியில் உள்ள கொடிக்கம்பத்தில் நேற்று பாலஸ்தீன கொடி ஏற்றப்படுள்ளது. கிராமத்தை சேர்ந்த சதாம், பவ்ரா, அனே உள்பட 7 பேர் பள்ளியில் பாலஸ்தீன கொடியை ஏற்றியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட கிராமத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலஸ்தீன கொடியை அகற்றினர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.