மும்பையில் விமான சேவை பாதிப்பு - பயணிகள் அவதி

மராட்டிய மாநிலம் மும்பையில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.;

Update:2025-08-09 21:23 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான விமானங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள், பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டிலேயே மிகவும் பரபரப்பான மும்பை விமான நிலையத்தில் இன்று சிறிது நேரம் விமான சேவை பாதிக்கப்பட்டது. விமான நிலைய நெட்ஒர்க் சேவையில் ஏற்பட்ட கோளாறால் விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். பின்னர், சுமார் ஒரு மணிநேரத்தில் நெட்ஒர்க் சேவையில் ஏற்பட்ட பிரச்சினை சரிசெய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்