பைக் விபத்தில் 4 பேர் பலி; திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது சோகம்

பைக் மீது மற்றொரு வாகனம் மோதிய விபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 4 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-02-21 09:14 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் எடாவா மாவட்டம் துலட்பூர் கிராமத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்கேற்றுவிட்டு அனுஷ் (வயது 17), ஹிமான்ஷு (வயது 15), ராகுல் (வயது 22), பிரன்ஷு (வயது 15), ரோகித் (வயது 18) ஆகிய 5 பேரும் ஒரே பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பைக்கில் பயணித்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், படுகாயமடைந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிரன்ஷு படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பைக்கில் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்