ஜி.எஸ்.டி. குறைப்பு; மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.;

Update:2025-09-18 03:45 IST

புதுடெல்லி,

நாடு முழுவதும் அமலில் இருந்த பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்கள் என்ற 4 அடுக்கு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 3-ந் தேதி டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மக்களுக்கு பயன்படும் முறையில் ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மற்ற பொருட்களுக்கு 2 மற்றும் 18 சதவீதம் என்ற 2 அடுக்கு மட்டுமே வரி நிர்ணயம் செய்யப்பட்டது.

அதே நேரம் அதிக ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீத வரி இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதங்கள் வருகிற 22-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசின் (சி.ஜி.எஸ்.டி.) விகிதங்களை பின்பற்றி மாநில அரசும் (எஸ்.ஜி.எஸ்.டி.) விகிதங்களை அறிவிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்