குஜராத்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மருத்துவ ஊழியர் கைது

சகாதேவை குஜராத் போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-05-24 17:09 IST

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ ஊழியர் சகாதேவ் சிங் கோலி. இவர் குஜராத்தில் உள்ள எல்லைப்பாதுகாப்புப்படை தளம், விமானப்படை தளம் குறித்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சகாதேவை குஜராத் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

சகாதேவ் சிங்கிற்கு 2023 ஜுலை மாதம் வாட்ஸ் அப் மூலம் அதிதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஏஜெண்ட் என்பது தெரியவந்த நிலையில் அவர் குஜராத்தில் உள்ள விமானப்படை தளத்தில் புகைப்படங்களை கேட்டுள்ளார். இதையடுத்து புகைப்படங்களை எடுத்து வாட்ஸ் அப் மூலம் அப்பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். மேலும், மர்ம நபருக்கு 40 ஆயிரம் பணமும் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சகதேவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்