குஜராத்தில் வெளுத்து வாங்கும் மழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் வாகனங்கள்

சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.;

Update:2025-06-19 18:53 IST

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு குஜராத்தின் அஹமதாபாத் சூரத் காந்திநகர் பாவ்நகர் உள்ளிட்ட பல இடங்களிலும் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு பல இடங்களில் வெள்ளம் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, பாவ் நகரில் உள்ள சிஹோர் தாலுகா பகுதியில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகளில் தேங்கி இருக்கும் வெள்ள நீரால் பேருந்து, பைக் உள்ளிட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்