கனமழை, வெள்ளம்: அசாம் - மேகாலயா முக்கிய சாலை துண்டிப்பு
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது;
கவுகாத்தி,
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, அசாம், அருணாச்சலபிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக அசாம் - மேகாலயா முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அசாமின் கவுகாத்தி மேகலயாவின் துரா நகரங்களை இணைக்கும் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை துண்டிப்பால் இரு பகுதிகளிலும் சரக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. துண்டிக்கப்பட்ட சாலையை சரிசெய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.