நாளை காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி

பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.;

Update:2025-04-24 20:19 IST

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. மேலும் இந்த சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதி களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீருக்கு செல்கிறார். அங்கு பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர்களை ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்