குற்றவழக்கில் தொடர்புடைய நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சீதாராம் சாரங்கி;

Update:2025-04-13 17:30 IST

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சீதாராம் சாரங்கி. இவர் மீது கொள்ளை, கொலை முயற்சி, அடிதடி உள்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சம்பல்பூர், சுந்தர்கட், ஜார்சுகுடா ஆகிய மாவட்டங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சாரங்கி தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில், சம்பல்பூரின் ரங்கியாடிக்ரா கிராமத்தில் சாரங்கி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அவரை கைது போலீசார் அந்த கிராமத்திற்கு சென்றனர்.

அப்போது போலீசார் வருவதை அறிந்த சாரங்கி தப்பியோட முயற்சித்தார். மேலும், தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு போலீசாரை சுட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தற்காப்புக்காக சாரங்கியை துப்பாக்கியால் சுட்டனர். இதில் காலில் குண்டு பாய்ந்த சாரங்கி படுகாயமடைந்தார். பின்னர், அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். குற்றவழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்