நடுரோட்டில் பெண்ணுடன் பா.ஜ.க. பிரமுகர் உல்லாசம்: வீடியோ வைரலானதால் பரபரப்பு
போலீசார் விசாரணையில் டெல்லி - மும்பை நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.;
புதுடெல்லி,
மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா போன்ற வட மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக பா.ஜனதா பிரமுகர் ஒருவர் நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோ வைரலானது.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் இருப்பவர் மத்தியபிரதேச மாநிலம் மந்த்சவுர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகர்லால் தாகட் என்பதும், டெல்லி - மும்பை நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட மனோகர்லாலை தேடியபோது அவர் தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் இந்த சம்பவத்துக்கும், தனக்கும் எந்த சம்பவமும் இல்லை என்றும், வீடியோவில் இருக்கும் கார் என்னுடையதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பான்புரா காவல் நிலையத்தின் விசாரணை அதிகாரி கூறுகையில், "பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவுகள் 296, 285 மற்றும் 3(5) இன் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும், வீடியோவை வைரலாக்கியது யார், அதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பதை நாங்கள் கண்டறிய வேண்டியிருப்பதால், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். சிசிடிவியில் காட்சிகள் பதிவாகியிருந்தாலும், கிளிப்களை வைத்திருப்பவர்கள் அவற்றை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். குற்றத்தில் வேறு நபர்கள் ஈடுபட்டனரா என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
அந்த ஆபாசமான செயலில் காணப்பட்ட பெண் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில், "அந்த பெண் மீது என்ன சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பதை முடிவு செய்வதற்கு முன், நாங்கள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். மேலும் பலர் சம்பந்தப்பட்டிருந்தால், பி.என்.எஸ். இன் கீழ் கூடுதல் விதிகளைச் சேர்ப்போம்" என்று கூறினார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர், கட்சியின் முதன்மை உறுப்பினர் கூட இல்லை என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.