மராட்டியம்: ரூ. 6.32 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது

மராட்டிய மாநிலத்தில் ரூ. 6.32 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-03-03 13:09 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தஹானு பகுதியில் உள்ள சரோட்டி டோல் நகாவில் உள்ள கோல் கிராமத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக அந்த வழியில் செல்லும் டெம்போவைக் கண்டனர்.

பின்னர் டெம்போவை நிறுத்தி சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு பிராண்டுகளான குட்கா மற்றும் ரூ. 6,32 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் வாகனமும் போலீசாரால் பரிமுதல் செய்யப்பட்டு அதன் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்