ஆபரேஷன் சிந்தூர் பற்றி இன்ஸ்டாவில் பதிவு; மாணவி கைது

சட்ட பல்கலைக்கழக மாணவிக்கு எதிராக, கைது வாரண்ட் ஒன்றை கோர்ட்டு பிறப்பித்தது.;

Update:2025-05-31 19:21 IST

குருகிராம்,

அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்தவர் ஷர்மிஷ்டா பனோலி. புனே சட்ட பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராமிலும் பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அவற்றில் அவர் சமீபத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுத படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பற்றி பாலிவுட் நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் என்று பகிர்ந்து உள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் குவிந்து வருகிறது. அவரை விமர்சித்து பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலரில் அவரை அச்சுறுத்தும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டனர். இதனால், அவர் அந்த வீடியோவை அழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். மன்னிப்பும் கோரினார்.

எனினும், கொல்கத்தாவில் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பனோலிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் பயந்து போன அவர், குடும்பத்துடன் தலைமறைவானார். அவருக்கு எதிராக, கைது வாரண்ட் ஒன்றை கோர்ட்டு பிறப்பித்தது. இந்த சூழலில் அவரை நேற்றிரவு குருகிராமில் வைத்து, போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்