விடுமுறை தினங்களை ஈடுசெய்யும் வகையில் 3 சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் - புதுச்சேரி அரசு
புதுச்சேரியில் வெயிலின் தாக்கத்தால் விடப்பட்ட 3 நாட்கள் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.;
புதுச்சேரி,
புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்க வேண்டும் என மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி (28-04-2025) முதல் ஜூன் 1-ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் வெயிலின் தாக்கத்தால் முன்னதாகவே விடப்பட்ட கோடை விடுமுறை தினமான 3 நாட்கள் (ஏப்ரல் 28, 29, 30ம் தேதிகள்) விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் ஆகஸ்ட் 2, 30ம் தேதி மற்றும் நவம்பர் 15ம் தேதி ஆகிய நாட்களில் (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.