டிரம்ப் - புதின் சந்திப்பு: இந்தியா வரவேற்பு
உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர உலகம் விரும்புகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது;
டெல்லி,
உக்ரைன், ரஷியா பேரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அந்த வகையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று சந்தித்தார்.
அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பின்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இருநாட்டு தலைவர்களும் கூறியுள்ள நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், டிரம்ப் - புதின் சந்திப்பை இந்தியா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபடி டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் சந்திப்பை இந்தியா வரவேற்கிறது. அமைதியை நிலைநாட்டுவதில் இருவரின் தலைமையும் மிகவும் பாராட்டத்தக்கது. போரை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் முன்னேற்றம் வேண்டும். உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர உலகம் விரும்புகிறது
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.