இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக உ.பி.யில் போராட்டம்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-09-14 20:04 IST

லக்னோ,

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது

இதனிடையே, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டுமென சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி , பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் அனைத்திந்திய இந்து சுரக்‌ஷா சங்கதன் என்ற அமைப்பு சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. மீரட்டில் நடந்த இந்த போராட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் விளையாடுவது வீரமரணமடைந்த இந்தியர்களை அவமதிக்கும் செயல், மதத்தின் பெயரை கேட்டு பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நமது மக்களை கொலை செய்தனர். ஆனால், நாம் அவர்களின் ரத்தத்தில் கிரிக்கெட் விளையாடுகிறோம். இது நாட்டுப்பற்று அல்ல வீரமரணமடைந்தவர்களை அவமதிப்பது என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்