விலை உயர்ந்த காரில் சென்றபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ரோகித் சர்மா
ரோகித் சர்மா தனது விலை உயர்ந்த லம்போர்கினி காரில் சென்று கொண்டிருந்தார்.;
மும்பை,
கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா மும்பையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. ரோகித் சர்மா தனது விலை உயர்ந்த லம்போர்கினி காரில் செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி நிற்கிறார்.
அப்போது ரசிகர் ஒருவர் மற்றொரு வாகனத்தில் இருந்து அவரை வீடியோ எடுத்து உள்ளார். ரசிகர் வீடியோ எடுப்பதை கவனித்த ரோகித் சர்மா, அவரை நோக்கி கையை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ரோகித் சர்மா கிரிக்கெட் பயிற்சியை முடித்துவிட்டு திரும்பிய போது அந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.