மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் ரூ.34.13 கோடி வருமானம் - மாநிலங்களவையில் எல்.முருகன் தகவல்
மோடி பிரதமராக பதவியேற்றது முதல் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களுடன் உரையாற்றி வருகிறார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி எல்.முருகன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:-
மனதின் குரல் நிகழ்ச்சி கூடுதல் செலவு இல்லாமல், ஏற்கனவே உள்ள வளங்களை பயன்படுத்தி அகில இந்திய வானொலியால் தயாரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மூலம இதுவரை ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 48 அகில இந்திய வானொலி நிலையங்கள், 92 தனியார் தொலைக்காட்சி சேனல்களில் இது ஒளிபரப்பப்படுகிறது. இதனால் இந்தியா முழுவதும் இந்த நிகழ்ச்சியை கேட்க முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மோடி பிரதமராக பதவியேற்ற 2014-ம் ஆண்டு முதல் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்களுக்கு வானொலி மூலம் உரையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.