பிரதமர் மோடியுடன் ரஷிய துணை பிரதமர் பேச்சுவார்த்தை

இந்தியா - ரஷியா உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது;

Update:2025-09-26 10:40 IST

டெல்லி,

ரஷிய துணை பிரதமர் டிமிட்ரி நிகோலாயெவிச் பெட்ருஷேவ். இவர் நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், உரம், உணவு பொருட்கள் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் இந்தியா - ரஷியா உச்சிமாநாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் ரஷிய அதிபர் புதினை வரவேற்க ஆவலுடன் இருப்பதாக டிமிட்ரியிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்