சிக்கிம் முதல்-மந்திரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ; மருத்துவமனையில் அனுமதி

பிரேம் சிங் தமாங் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது.;

Update:2025-11-14 04:49 IST

கேங்டாக் ,

சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக பிரேம் சிங் தமாங் (வயது 57) செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரேம் சிங் தமாங்கிற்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறியுள்ளது. மேலும், அவரது உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்