கல்லூரி மாணவருடன் ஆசிரியை உல்லாசம்: எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக பார்த்த கணவன்

லட்சுமணன் வீட்டில் இல்லாத நேரத்தில் மாணவர் வள்ளியின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.;

Update:2025-05-14 16:23 IST

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ் பேட்டையில் வசிக்கும் லட்சுமணன் (32) இறால் பண்ணை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். அவர் தினந்தோறும் இரவில் தனது இறால் பண்ணைக்கு காவலுக்கு சென்றுவிட்டு அதிகாலையில்தான் வீடு திரும்புவார். லட்சுமணன் மனைவி நாகலட்சுமி (28) தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கல்லூரியில் படிக்கும் மணிகண்டா (23)என்ற மாணவருடன் நாகலட்சுமிக்கு கள்ளக்காதல் இருந்து வந்தது. மணிகண்டாவும் நாகலட்சுமியும் பலமுறை ரகசியமாக வெளியில் சென்று உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு லட்சுமணன் இறால் பண்ணைக்கு சென்றபோது மணிகண்டாவை வீட்டிற்கு வரவழைத்த நாகலட்சுமி, தனது 7 வயது மகனை வீட்டில் வைத்து கொண்டே மணிகண்டாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இரவில் வழக்கம் போல் இறால் பண்ணைக்கு சென்ற லட்சுமணன், மனைவி மீது சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீடு திரும்பி உள்ளார். அப்போது அவர் கண்ட காட்சி தூக்கிவாரி போட்டுள்ளது. ஜன்னல் வழியே பார்த்தபோது, அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்த லட்சுமணன் கண்கலங்கி போனார். தாலி கட்டிய மனைவியே இப்படி துரோகம் செய்யலாமா? என கண்ணீர் விட்ட அவர், மனதை கல்லாக்கி கொண்டு வீட்டின் அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு போலீசாருக்கும் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார்.

உடனடியாக, உள்ளூர் மக்களும் உறவினர்களும் அங்கு வந்தபோது நாகலட்சுமியையும், காதலன் மணிகண்டாவையும் கையும் களவுமாக பிடித்தனர். அப்போது மணிகண்டாவை தாக்க முயன்ற லட்சுமணனை போலீசார் தடுத்து மணிகண்டாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்