பயங்கரவாதமே பாகிஸ்தானின் போர் உத்தி, இந்தியா அதற்கேற்ப பதிலளிக்கும் - பிரதமர் மோடி
பாகிஸ்தானால் நேரடியாக போரிட்டு, இந்தியாவை வீழ்த்த முடியாது என்பதால் பயங்கரவாத அமைப்புகள் மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.;
காந்திநகர்,
குஜராத் மாநிலம், காந்தி நகரில் ரூ.5,536 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:
உலகின் 4வது பொருளாதார நாடானது இந்தியா. இப்போது நாம் ஜப்பானை விஞ்சிவிட்டோம் என்பது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும்.1947ல் காஷ்மீரின் சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட போது, அதை திரும்ப பெறும்வரை நமது படைகளை திரும்பப் பெறக்கூடாது என்றார் வல்லபாய் படேல். அப்போது அவர் கூறியதை யாரும் கேட்கவில்லை. (காஷ்மீரின் சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட சமயத்தில் இந்திய பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு)
பாகிஸ்தானால் நேரடியாக போரிட்டு, இந்தியாவை வீழ்த்த முடியாது என்பதால் பயங்கரவாத அமைப்புகள் மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதம் மறைமுகப் போர் அல்ல, மாறாக வேண்டுமென்றே செய்யப்படும் போர் உத்தி, இந்தியா அதற்கேற்ப பதிலளிக்கும்.
மே 6 அன்று இரவு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு பாகிஸ்தானில் அரசு மரியாதை வழங்கப்பட்டது. பாகிஸ்தானின் கொடிகள் பயங்கரவாதிகளின் சவப்பெட்டிகளில் மீது வைக்கப்பட்டன. மேலும் அவர்களின் ராணுவத்தினர் இறுதி சடங்கில் பங்கேற்றனர். மேலும் அவர்களின் இராணுவம் அவர்களுக்கு வணக்கம் செலுத்தியது.
இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் மறைமுகப் போர் மட்டுமல்ல, அவர்களின் பங்கில் வேண்டுமென்றே செய்யப்படும் போர் உத்தி என்பதை இது நிரூபிக்கிறது. அவர்கள் போரில் ஈடுபட்டால், அதற்கேற்ப பதில் இந்தியா தரப்பில் இருக்கும். இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குச் சென்ற போதெல்லாம், இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானை தோற்கடித்ததாகவும், இது அண்டை நாடு ஒருபோதும் மறக்க முடியாது. நாட்டில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.
நாள்தோறும் எத்தனை வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் என மக்கள் கணக்கெடுக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை அடுத்து மக்கள் கணக்கெடுக்க வேண்டும். எவ்வளவு லாபம் வந்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்கமாட்டோம் என வியாபாரிகள் கூற வேண்டும். துரதிர்ஷடவசமாக விநாயகர் சிலைகள் கூட வெளிநாட்டில் இருந்துதான் வருகின்றன.ஆபரேஷன் சிந்தூர் அடுத்தக்கட்டம் நோக்கி செல்ல மக்களின் வலிமை தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.