பல கதைகளை கூறி 10 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி
கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்த ரேஷ்மா, அதற்குள் பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமண பந்தத்திற்கு தயாராகி உள்ளார்.;
திருவனந்தபுரம்,
பணம் பறிக்கும் சில பெண்கள் இதற்காக பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி குடும்பத்தினரையும் வேறு சிலரையும் நம்ப வைத்து டாக்டர் உள்பட பலரிடம் பணம் பறித்த பெண்ணின் செயல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் 10 ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி இளம் பெண் பணம் பறித்த அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காஞ்சிரா மட்டம் பகுதியை சோந்தவர் ரேஷ்மா (வயது 28). அழகும் திறமையும் கொண்ட இவருக்கும் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. திருவனந்த புரத்தில் வெள்ளிக்கிழமை திட்டமிடப் பட்டிருந்த நிலையில் ரேஷ்மா முதல் நாள் திருவணந்தபுரம் வேம்பாயம் அழைத்து வரப்பட்டார்.
அவரை தனது நண்பர் வீட்டில் வருங்கால கணவரான பஞ்சாயத்து உறுப்பினர் தங்க வைத்தார்.அப்போது அவருக்கு ரேஷ்மா பற்றி சில தகவல்கள் கிடைத்தன. மேலும் அவரது நடவடிக்கையும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது. இந்த நிலையில் திருமண அலங்காரத்திற்காக ரேஷ்மா அழகு நிலையம் சென்றார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரது உடமைகளை பஞ்சாயத்து உறுப்பினர் தனது நண்பருடன் சேர்ந்து சோதனை செய்தார். அப்போது ரேஷ்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆரியநாடு போலீசில் புகார் செய்தார். இந்த விவரங்கள் தெரியாமல் ரேஷமா அலங்காரம் முடித்து திரும்பியபோது போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ரேஷ்மாவுக்கு திருமணம் என்பது புதிதல்ல.. அவர் பல்வேறு மாவட்டங்களில் பல கதைகள் கூறி திருமண பந்தம் ஏற்படுத்தி பலரிடம் பணம் பறித்துள்ள தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்த ரேஷ்மா, அதற்குள் பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமண பந்தத்திற்கு தயாராகி உள்ளார்.மேலும் அடுத்த மாதம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய பேசி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஓரே பெண் எப்படி? மாறி மாறி ஆண்களை ஏமாற்றி வந்தது. திருமணம் செய்தார்? என விசாரித்த போது,
ஆன்லைனில் விளம்பரப்படுத்தியும், அதில் வரும் திருமண வரன் தகவல்களை சேகரித்தும் ரேஷ்மா திருமண பந்தத்தில் ஈடுபட்டுள்ளார்.திருமணம் செய்த ஒவ்வொருவரிடமும் ஒரு கதையை நம்பும் படி கூறி ஏமாற்றி உள்ளார். ஆனால் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல தற்போது அவர் சிக்கி உள்ளார். அவரை போலீசார் கைது செய்ய காரணமான பஞ்சாயத்து உறுப்பினர் இது பற்றி கூறு கையில் திருமண விளம்பர குழுவில் எனது செல்போன் நம்பரை நான் பதிவு செய்திருந்தேன். அந்த எண்ணுக்கு கடந்த மாதம் (மே) 29-ந் தேதி அழைப்பு வந்தது.
அதில் பேசியவர் தான் அப்பெண்ணின் தாய் என அறிமுகப்படுத்திக் கொண்டு ரேஷ்மாவின் செல்போன் எண்ணை கொடுத்தார். அதன் மூலம் ரேஷ்மாவிடம் பேசினேன். பின்னர் நாங்கள் 2 பேரும் கோட்டயத்தில்உள்ள ஒரு மாலில் நேரில் சந்தித்து பேசினோம்.அப்போது தான் ஒரு தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்றும். தனக்கு திருமணம் செய்து வைப்பதில் தாய்க்கு ஆர்வம் இல்லை என்றும். அவர் தன்னை துன்புறுத்துவதாகவும் ரேஷ்மா கதையை கூறி ரீல் விட்டுள்ளார். அதில் உண்மை என்று என்று திருமணத்திற்கு சம்மதித்தேன். அப்போது
திருமண விழாவில் தனது தரப்பில் இருந்து பெரிதாக யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் ரேஷ்மா தெரிவித்தார். அதன்பிறகே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும் அவரது நட வடிக்கை எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாலேயே அவரது உடமைகளை சோதனை செய்தேன். அப்போது தான் அவரது திருமணம் தொடர்பான தகவல்கள் கிடைத்தன
இதற்கிடையில் அடுத்தமாதம் த்ருமணம் செய்த இருந்த நபரையும் தற்போது அழைத்து வந்ததாக போலீசாரிடம் ரேஷ்மா தெரிவித்தார். இதனை கேட்டு போலீசார் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு மாவட்டத்திற்கு ஒரு கதை சொல்லி பலரை திருமணம் செய்த கல்யாண ராணி ரேஷ்மா. 10-க்கும் மேற்பட்ட வாலிபர்களை இதுபோல் ஏமாற்றி திருமண வலையில் வீழ்த்தி பணம் பறித்து இருக்கலாம் என் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.