வழக்கம் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி
மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர். அதாவது, 95.03 சதவீதம் பேர் வெற்றி வெற்றுள்ளனர்.
இதில், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.70 (4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர்) ஆகும்.
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.16 (3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர்) ஆகும்.
அதாவது, மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை மேலும் உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன?
இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்துஒரு சவரன் ரூ.73,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.110-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: பாட வாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்கள் விபரம்
தமிழ் பாடத்தில் 135 பேர் 100 க்கும் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக அரியலூர் உள்ளது. 98.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-2 ரிசல்ட்.. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.. யாருக்கு முதல் இடம்..? முழு விவரம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) வெளியாகி உள்ளது. பொதுத்தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காலை 9 மணிக்கு வெளியிட்டார்.
ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம் - மத்திய மந்திரி சபை ஒப்புதல்
தொழிற்பயிற்சி கல்வி மேம்பாட்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி திட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் தேசிய திறன் பயிற்சி நிறுவன மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
புதிய போப் தேர்வாகவில்லை.. முதல் வாக்குப்பதிவுக்குப் பிறகு வெளியேறிய கரும்புகை
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக உலகமெங்கிலும் இருந்து வாடிகனில் குவிந்திருந்த கார்டினல் எனப்படும் கர்தினால்கள் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னையில் 2ஆவது நாளாக இன்றும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை
சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
இதன்படி மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 58-வது ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்- இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு
'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் பற்றி விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள கமிட்டி அறையில் இக்கூட்டம் நடப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) வெளியாகிறது.
பொதுத்தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காலை 9 மணிக்கு வெளியிட இருக்கிறார்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.