உ.பி.: மகா கும்பமேளாவுக்கு சென்ற பக்தர்களின் கார், பஸ்சுடன் மோதி 10 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் சென்ற கார், பஸ் மீது மோதி விபத்தில் சிக்கியதில் காரில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-02-15 09:28 IST

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சத்தீஷ்காரின் கோர்பா மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் சிலர் காரில் புறப்பட்டு சென்றனர்.

அவர்களுடைய கார் பிரயாக்ராஜ் நகரில் மெஜா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்றபோது, நேற்றிரவு பஸ் மீது மோதி விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர். பஸ்சில் இருந்த பயணிகளில் சிலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விபத்திற்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்