செல்போன் வாங்கித்தர பெற்றோர் மறுத்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் சங்கபூர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 2 மகள்கள் இருந்தனர். இதில், 13 வயதான இளைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
இதனிடையே, அந்த சிறுமி தனது பெற்றோர் செல்போனில் அவ்வப்போது கேம் விளையாடி வந்தார். மேலும், தனக்கு புதிய செல்போன் வாங்கித்தரும்படி சிறுமி பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால், சிறுமிக்கு செல்போன் வாங்கிக்கொடுக்க பெற்றோர் மறுத்துள்ளனர்.
இந்நிலையில், பெற்றோர் செல்போன் வாங்கித்தர பெற்றோர் மறுத்ததால் விரக்தியடைந்த சிறுமி இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மூத்த மகளுடன் சிறுமியின் தாயார் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டில் இளைய மகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.