தேஜஸ்வியின் மகனுக்கு இராஜ் என பெயர் சூட்டியுள்ளோம்: லாலு யாதவ்
உங்கள் அனைவருடைய வாழ்த்துக்கும், ஆசிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என லாலு யாதவ் தெரிவித்து உள்ளார்.;
பாட்னா,
ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ். பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவவராக உள்ள தேஜஸ்வியின் மனைவிக்கு, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று ஆண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தேஜஸ்வியின் குழந்தையையும் மற்றும் குடும்பத்தினரையும் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு நேரில் சென்றார். தாயையும், சேயையும் அவர் வாழ்த்தினார்.
இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ், அவருடைய பேரனுக்கு இராஜ் என இன்று பெயர் சூட்டியுள்ளார். எங்களுடைய பேத்தி காத்யாயனிக்கு சிறிய சகோதரன் பிறந்திருக்கிறான். அவனுக்கு நானும், ராப்ரி தேவியும் இராஜ் என பெயர் சூட்டியிருக்கிறோம். தேஜஸ்வியும், ராஜஸ்ரீயும், இராஜ் லாலு யாதவ் என முழு பெயரை தந்துள்ளனர்.
காத்யாயனி, நவராத்திரி சுப தினத்தின் 6-வது நாளான காத்யாயனி அஷ்டமி தினத்தில் பிறந்தவள். இந்த மகிழ்ச்சியின் மொத்த உருவான குழந்தை, பஜ்ரங் பலி அனுமனின் மங்கள நாளான செவ்வாய் கிழமையில் பிறந்திருக்கிறான். அதனால், இராஜ் என பெயர் சூட்டியிருக்கிறோம். வாழ்த்துக்கும், ஆசிகளுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். தாயும், சேயும் நன்றாக உள்ளனர் என எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.\