டெல்லியில் மினி லாரி மோதி பெண் பலி
டெல்லியில் மினி லாரி மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.;
புதுடெல்லி,
டெல்லியின் பால்ஸ்வா டெய்ரியைச் சேர்ந்தவர் பூஜா தேவி. இவர் ஆசாத்பூர் மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மினி லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பூஜா மீது மோதியது. இந்த விபத்தில் பூஜா தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதைக்கண்ட பொதுமக்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தார் என தெரிவித்தனர். பின்னர் பூஜாவின் உடல் பிரேச பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே இந்த விபத்தை ஏற்படுத்திய கோவிந்தபுரியை சேர்ந்த அபிஷேக்கை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரது மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்