10-ம் வகுப்பு தேர்வு முடிவு: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

எதிர்கால கல்வி பயணத்திலும் வெற்றி என்ற இலக்கை பெற இதே உழைப்பை தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update:2025-05-16 14:31 IST

சென்னை,

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். உங்கள் எதிர்கால கல்வி பயணத்திலும் வெற்றி என்ற இலக்கை பெற இதே உழைப்பை தொடருங்கள்.

தேர்ச்சியின் எல்லை வரை சென்று வெற்றியை தவற விட்டவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். வெற்றி தோல்வி என்பது வாழ்வில் தற்காலிக நிகழ்வே. உங்களின் முயற்சிகளை மறுபரீசலனை செய்து வெற்றிக்கான வழிகளைத் தேடி முன்னேறுங்கள்.

கற்றலின் மீதான உங்கள் ஆர்வமும்,கடின உழைப்பும் உங்கள் வெற்றியை உறுதியாக்கும். உங்களுக்கு என் வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்