திருநெல்வேலியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

முக்கூடல் பகுதியில் போலீசார் சோதனையின்போது 2 பேர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.;

Update:2025-06-15 07:30 IST

திருெநல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆக்னல் விஜய் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முக்கூடல் மெயின் ரோட்டில் உள்ள தாம்போதி பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பாப்பாக்குடி நடுத்தெருவை சேர்ந்த சிவா (வயது 19) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 2 பேரையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 50 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர், சிவாவை நேற்று கைது செய்தார். ஒரு இளஞ்சிறாரை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை அவர் பறிமுதல் செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்