22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

Update:2024-12-22 09:54 IST
Live Updates - Page 4
2024-12-22 05:27 GMT

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா 2024ம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் புத்தகங்களில் தனக்குப் பிடித்தவற்றை பட்டியலிட்டுள்ளார். இந்த பட்டியலில் பாயல் கபாடியா இயக்கிய ஆல் வி இமேஜின் ஆஸ் லைட் (ALL WE IMAGINE AS LIGHT) படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற திரைப்படம் தற்போது கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

2024-12-22 05:00 GMT

மெல்பர்னில் நடைபெற உள்ள பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின்போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடது காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

2024-12-22 04:56 GMT

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் வரத்து உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

2024-12-22 04:46 GMT

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது.

2024-12-22 04:46 GMT

நெல்லை மாவட்டத்தில் டன் கணக்கில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை அம்மாநில அரசு சார்பில் அகற்றும் பணியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

2024-12-22 04:44 GMT

திருவனந்தபுரத்தில் ஓடிக்கொண்டிருந்த பிஎம்டபள்யூ கார் திடீரென தீப்பிடித்த நிலையில், அங்கிருந்த பொது மக்கள், உடனடியாக தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

2024-12-22 04:43 GMT

புதுக்கோட்டையில் பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது, கவிதா (27) என்ற கர்ப்பிணிப் பெண் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவம் பார்த்து தாய், சேய் இருவரையும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ், ஓட்டுநர் கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

2024-12-22 04:40 GMT

பொது இடங்களில் மின் விபத்துகளால் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு மின்சார வாரியம் வழங்கும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்வு! முழு பார்வை பாதிப்பு, 2 கை, கால்களும் செயலிழந்தால் வழங்கப்படும் நிவாரணம் ரூ.3 லட்சமாகவும், ஒரு கை, கால் செயலிழப்புக்கு நிவாரணம் ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தி மின்சார வாரியம் அரசாணை வெளிட்டுள்ளது.

2024-12-22 04:28 GMT

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது.

2024-12-22 04:27 GMT

சென்னை பள்ளிக்கரணையில் தடுப்புச்சுவற்றில் பைக் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த விஷ்ணு, பம்மலைச் சேர்ந்த கோகுல் என்பவர் உயிரிழந்துள்ளனர். தனியார் நிறுவன ஊழியர்களான இருவரும் வார இறுதிநாளை கொண்டாடிவிட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்