தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
தூத்துக்குடி மேட்டுப்பட்டி சுடுகாடு அருகே மோட்டார் பைக்குடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.;
தூத்துக்குடியில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பட்டி சுடுகாடு அருகே மோட்டார் பைக்குடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்கள் விற்பனை செய்ய கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் மாதவன் காலனி ஆறுமுகம் மகன் முனீஸ்வரன் (வயமு 20), சங்குகுளி காலனி மாடசாமி மகன் அஜித்குமார்(19), நேருநகர், சுனாமி காலனி அருளப்பன் மகன் செல்வம்(27) என தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 30 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.