‘சென்னை ஒன்று செயலி ’ மூலம் 4,395 பேர் பஸ் - ரெயில்களில் பயணம்

காலை 10 மணி நிலவரப்படி மொத்தம் 1,04,437 பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளனர்.;

Update:2025-09-23 15:59 IST

சென்னை,

இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் பஸ், மெட்ரோ ரெயில், புறநகர் மின்சார ரெயில் மற்றும் வாடகை ஆட்டோ, கார் ஆகிய அனைத்து போக்குவரத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒரே கியூ ஆர் பயணச்சீட்டு மூலம் பயணம் செய்ய சென்னை ஒன்று என்ற புதிய செயலியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த புதிய செயலிக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளில் மட்டும் 79,771 பேரும் இன்று 24,666 பேரும் சென்றை ஒன்று செயலியை பதிவிறக்கம் செய்தனர். இன்று காலை 10 மணி நிலவரப்படி மொத்தம் 1,04,437 பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளனர்.

இதில் 2,382 பேர் (54 சதவீதம்) பஸ்சிலும் 1,212 பேர் புறநகர் மின்சார ரெயிலிலும், 799 பேர் மெட்ரோ ரெயிலிலும் சென்னை ஒன்று செயலி மூலம் பயணம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்