திருச்செந்தூரில் பேரிகார்டு மீது பைக் மோதி விபத்து: வாலிபர் பலி
திருச்செந்தூர் அருகே உள்ள கூர்ந்தான்விளை, கிழக்கு தெருவைச் சேர்ந்த பாபு கூலி வேலை செய்து வருகிறார்.;
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள கூர்ந்தான்விளை, கிழக்கு தெருவைச் சேர்ந்த பிரம்மநாயகம் மகன் பாபு (வயது 35). இவருக்கு திருமணமாகவில்லை. கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் திருச்செந்தூரில் இருந்து குரும்பூருக்கு சென்று கொண்டிருந்தார். நத்தக்குளம் அருகே வளைவு ரோட்டில் சென்றபோது சாலையில் இருந்த பேரிகார்டு மீது பைக் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலூகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.