ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என்று கூறி பெண் தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி

ஆன்லைன் மோசடியில் முக்கிய குற்றவாளியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தீபா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2025-11-18 03:52 IST

கோப்புப்படம் 

சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் சுதா கார்த்திக் (44 வயது). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தொழில் அதிபராகவும் உள்ளார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில், தனது ‘வாட்ஸ்-அப்' எண்ணில் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ‘ஆன்லைன்' வியாபாரத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி ரூ.25 லட்சம் முதலீடு செய்து மோசம் போய்விட்டதாகவும், அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்பேரில் கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ‘ஆன்லைன்' மோசடியில் முக்கிய குற்றவாளியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தீபா (26 வயது) என்ற பெண்ணை கைது செய்தனர்.

அவர், சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது பெங்களூருவில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், ஆன்லைன் மோசடி குற்றவாளிகளுக்கு துணையாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது. தீபா, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்