பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்
கூடுதல் முன்பதிவு டோக்கன்களை அளிக்க பத்திரப்பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.;
சென்னை,
சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய முன்பதிவுகள் அதிகம் நடைபெறும். இதை கவனத்தில் வைத்து, சுபமுகூர்த்த தினமான நாளையும், 16-ம் தேதியும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்களை அளிக்க பத்திரப்பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஒருசார்பதிவு அலுவலகத்தில் 100-க்கு பதில் 150, 2 சார்பதிவு அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 டோக்கன்களை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.