ராமதாசை சந்தித்து நலம் விசாரித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

ராமதாஸ் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-10-06 20:00 IST

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (வயது 86). இவர் சமீப காலமாக பாமக மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார்.

இதனிடையே, டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அவருக்கு இன்று ஆஞ்சியோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு வழக்கமான இதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், ராமதாஸ் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக, ராமதாசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்