தேனியில் மார்ச் 1-ல் அதிமுக பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்

மறைந்த முன்னள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.;

Update:2025-02-15 18:23 IST

சென்னை,

மறைந்த முன்னள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுமென அதிமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

"முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 25.2.2025 – செவ்வாய்க் கிழமை முதல் 1.3.2025 – சனிக் கிழமை வரை 5 நாட்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் மார்ச் 1-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை, கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், ``நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழுக்கும்'' அனுப்பி வைக்க வேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்