எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துபெற்ற அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள்

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.;

Update:2025-06-01 13:53 IST

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் 6 எம்.பி. பதவிகளில் சட்டசபை பலத்திற்கு ஏற்ப தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு பா.ஜ.க. ஆதரவுடன் 2 எம்.பி.க்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதனிடையே, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ. அதிமுக வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவை தலைவர் தனபால் ஆகியோர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இன்பதுரை மற்றும் தனபால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றனர்.

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு சீட்களும் அதிமுகவுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்