சட்டசபை இன்று கூடுகிறது; மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல்

கரூர் சம்பவம், கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் என பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை இன்று கூட உள்ளது.;

Update:2025-10-14 05:56 IST

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில், சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, வரும் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை 4 நாட்கள் நடைபெறும் என முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு. 'சட்டமன்ற பா.ம.க. கட்சித் தலைவர் மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் எனது பரிசீலனையில் உள்ளன' என்று தெரிவித்தார். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்போது, மறைந்தவர்களின் புகைப்படங்கள் அங்கு இருக்கும் திரையில் திரையிடப்பட உள்ளது. இது தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக நடக்கும் நிகழ்வாகும்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, தமிழக சட்டசபை இன்று செவ்வாய்க்கிழமை (அக். 14) கூடுகிறது. வரும் 17-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கரூர் சம்பவம், கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் என பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை இன்று கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்