அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக எந்த விதத்திலும் காரணம் இல்லை: எச்.ராஜா

விஜய்யின் பேச்சு அர்த்தமற்ற வெறும் பேச்சு தான் என்று எச்.ராஜா கூறினார்.;

Update:2025-09-18 01:32 IST

திருச்சி,

திருச்சியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக காரணம் இல்லை. நாம் அது போன்ற வேலை செய்வதில்லை. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியே போனார், அதற்கு யார் காரணம்?. கருணாநிதி அவரை கட்சியில் இருந்து விளக்கியது தான் காரணம். அதேபோல் ஒவ்வொரு கட்சிக்குள்ளும் அன்று முதல் இன்று வரை கட்சி பிளவு இருந்திருக்கிறது.

கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுவதற்கு பாஜக எந்த விதத்திலும் காரணம் இல்லை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஊழல் அரசை தோற்கடிக்க மக்கள் நினைக்கின்றனர். அந்த அளவுக்கு தி.மு.க. அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இன்றைய அரசியல் சூழலில் யார் கூட்டணியில் இருக்கின்றனர்?. யார் வெளியே சென்றனர் என்பது பற்றி மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.

வரும் தேர்தலில் எத்தனை முனை போட்டி வந்தாலும் தி.மு.க. அரசு தூக்கி எறியப்படும். திடீரென சினிமாவில் இருந்து வந்தவர் ஏதோ பேசுகிறார் என்பதற்காக த.வெ.க. மாற்றாக வர முடியாது. பா.ஜனதா கொள்கை எதிரி என்று விஜய் கூறுகிறார். முதலில் அவருடைய கொள்கை என்ன என்று சொல்லியிருக்கிறாரா?. அவருடைய பேச்சு அர்த்தமற்ற வெறும் பேச்சு தான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்