சென்னை இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஈசிஆர் சாலையில் இஸ்கான் ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோவில் உள்ளது.;
சென்னை ஈசிஆர் சாலையில் இஸ்கான் ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இஸ்கான் கோவிலுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இஸ்கான் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நேற்று டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.
இதையடுத்து, போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் இஸ்கான் கோவிலுக்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை. மேலும், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.