கரூர் கூட்ட நெரிசல் நடந்த பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆய்வு
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.;
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி எம்.பி. , விஜய் வசந்த் எம்.பி., ராபர்ட் புரூஸ் எம்.பி.ஏ. ஆகியோரும் கூட்ட நெரிசல் பகுதியை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் நேரில் சந்தித்து கே.சி.வேணுகோபால் ஆறுதல் கூறினார்.