23-ந்தேதி திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு

முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் கூட்டம் நடைபெறுமென துரைமுருகன் அறிவித்துள்ளார்.;

Update:2025-09-21 14:39 IST

சென்னை,

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 23.09.2025 செவ்வாய் கிழமை, காலை 10 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும். இதில் தி.மு.க. மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்